ராசி பலன் – Rasi Palan | Astrology In Tamil
ராசி பலன் 2019: Rasi Palan -2019 astrology In Tamil
2019 இல் உங்களது நட்சத்திரங்கள் என்ன பலனை தரப்போகின்றன? 2019 வருடாந்தர ராசி பலனை கொண்டு உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்வீர்! வேதிக் ஜோசியத்தை அடிப்படையாக கொண்டு பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. உங்களது வாழ்வின் பல்வேறு அம்சங்களான பிசினஸ், செல்வம், கல்வி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பலன்களை அறிந்து கொள்வீர்.
மேஷ ராசிபலன் 2019
ராசி படி 2019 ஆம் ஆண்டில், மேஷ ராசிகாரர்களின் உடல் நலம் சீராக இருக்கும். இந்த வருடம், நீங்கள் கலவையான பலன்களை பெறுவீர்கள். உங்களது நலம் பற்றிய கவனம் கொண்டிருப்பதால், வருட ஆரம்பத்தில் உடல் நலனில் சாதகமான பலன்களை பெறலாம். இந்த காலகட்டத்தில், சின்ன சின்ன டென்ஷன்களை கைவிட்டால் உங்களது உடல் ஆரோக்கியமாகவே இருக்கும். இவ்வருடம், வேலையை பொருத்த வரை கலவையான பலன்களை பெறுவீர்கள். உங்களது வேலையில் பணியுயர்வு பெற சாத்தியம் உள்ளது.உங்களது தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அதிர்ஷ்டம் உதவும். உங்களது பிராஜெக்ட்டுகளுக்காக வருட ஆரம்பம் முதலே கடினமாக உழைப்பீர்கள். அது எதிர்கால்த்தில் உங்களுக்கு கை கொடுக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வருட ஆரம்பத்தில் பொருளாதார நிலை உறுதியாக இருக்கும் ஆனால் செலவுகளும் ஏறியபடியே இருக்கும். திடீரென்று தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். அதை கட்டுப்படுத்தாவிட்டால், பொருளாதார நிலையில் சிக்கல் ஏற்படக் கூடும்.மேஷ ராசிக்காரர்களுக்கு 2019 வருட நடுவில் (ஜூன்–ஜூலை), பிசினஸ் சூடு பிடிக்கும், இதனால் உங்களது பொருளாதார நிலை உயரும். காதல் வாழ்வில் பெரிதாக மாற்றம் இருக்காது. உறவினை வலுப்படுத்த, காதலில் ஒளிவு மறைவு இருக்க கூடாது.
பரிகாரம் செய்யும் புண்ணிய தளங்கள்
Opening and closing times: 4.00 am to 1.00 pm-3.00 pm to 8.30 pm.
Address: Rameswaram – 623 526, Ramanathapuram district,
Phone no:+ 91-4573 – 221 223.
Car Rental In Prompt Travels–Your Travel Partner
ரிஷப ராசி பலன் 2019
ரிஷப ராசியின் படி 2019 ஆம் ஆண்டில், உங்களது உடல் ஆரோக்கியம் சிறிது குறையும் எனவே இந்த வருடம் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல் அவசியம். உணவு பழக்ககளில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். 2019 ராசி பலனின் படி, இவ்வருடம் நாள்பட்ட உடல் பாதிப்புகள் ஏற்படலாம். வருட ஆரம்பத்திலேயே உங்களது வேலை தொடர்பான சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் கடின உழைப்பால் அதனை சரி செய்து நற்பலன்களை பெறலாம்.வருடம் முழுவதும் வேலையில் கவனமாக இருப்பீர்கள். மேலும் கடினமாக உழைத்து உங்களது வேலையில் தனித்துவமான இடத்தை பிடிப்பீர்கள். பொருளாதார நிலை எப்போதையும் விட சிறப்பாகவே இருக்கும். உங்களது பொருளாதார நிலை உயர்ந்தாலும், செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புண்டு. வீண் செலவுகளை குறைக்காவிட்டால் உங்களது தற்போதைய பொருளாதார நிலை பாதிப்படைய கூடும்.உங்களது வருமானம் இந்த வருடம் உயர வாய்ப்புள்ளது. எனவே உங்களது பொருளாதார நிலை உறுதியாக இருக்க்கும். இந்த சூழல் வருடம் முழுக்க தொடரும்.
பரிகாரம் செய்யும் புண்ணிய தளங்கள்
Arulmigu Yoganandheeswarar Tirukkoil
Opening and closing times: 6.00 am to 12.30 pm 3.00 pm to 8.30 pm.
Address: Tiruvisanallur – 612 105, Thanjavur District,
Phone: +91 44-2723 1899.
Car Rental In Prompt Travels-Your Travel Partner
மிதுன ராசி பலன் 2019
மிதுன ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு, உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். எனினும், சில நேரங்களில் சிறு உபாதைகள் வந்து போகும். வருட ஆரம்பத்தில், அதாவது ஜனவரி மாதம், உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரும பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையை பொருத்த வரையில் இந்த வருடம் சாதாரணமாகவே இருக்கும். எனினும், நீங்கள் கடினமாக உழைத்தால் இந்த வருடம் வேலையில் சிரப்பான பலன்களை பெற முடியும். வேலையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.வேலையில் முன்னேற்றம் பெற, நீங்கள் புதிய யோசனைகளை உருவாக்க வேண்டும். உங்களது சீனியர் பணியாளரின் ஆலோசனைப்படி நடப்பது சாதமாக அமையும். 2019 பலனின் படி, பொருளாதார ரீதியாக லாபங்கள் பெற நல்ல வாய்ப்புகள் உள்ளன. பிசினசில் புதிய ஐடியாக்களை செயல்படுத்துதல் லாபம் தரும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். எனினும் உங்களது பிசினசை விரிவுபடுத்த, வீட்டை விட்டு தொலை தூரம் செல்ல வேண்டியிருக்கலாம்.
பரிகாரம் செய்யும் புண்ணிய தளங்கள்
Sri Dandayuthapani(Kuzhandai Valayuthar) Temple
Opening and closing times: 6.00 a.m. to 9.00 p.m.
Address: Palani- 624 601, Dindigul Dist,
Phone:+91-4545 – 242 293, 242 236, 242 493.
Car Rental In Prompt Travels-Your Travel Partner
கடக ராசி பலன் 2019
கடக ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு, வேலை மற்றும் பொருளாதார ரீதியாக மிக சாதகமாக அமையும், எனினும் வருடம் முழுவதும் உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையை பொருத்த வரையில் பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பிப்ரவரி முதல் மார்ச் வரை மற்றும் நவம்பர் முதல் டிசம்பர் வரை, வேலை மற்றும் பிசினஸ் தொடர்பான நற்செய்திகள் கிடைத்த வண்ணம் இருக்கும்.அதே நேரத்தில், நீங்கள் புதிய பிசினஸ் தொடங்கவோ அல்லது பிசினசை விரிவுபடுத்தும் சூழலோ ஏற்படலாம். இப்போது உங்களது பொருளாதார நிலை பற்றி பார்ப்போம். இந்த வருடம் உங்களது பொருளாதார நிலை சீராக இருக்கும். வருடம் முழுவதும் பண வரவுகள் இருக்கும். 2019 ராசிபலனின் படி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பண நடமாட்டம் அதிகமாக இருக்கும்.இந்த காலகட்டத்தில், வருவாயில் உயர்வு மற்றும் பொருளாதார ரீதியாக லாபங்கள் அதிகரித்து உங்களது அந்தஸ்த்தை உயர்த்தும். பொருள் வரவுடன், சில பண இழப்புகளும் இவ்வருடம் ஏற்ப்படக் கூடும். எனவே பிப்ரவரி முதல் மார்ச் மாதத்துக்குள் பணத்தை சாமர்த்தியமாக முதலீடு செய்யவும்.
பரிகாரம் செய்யும் புண்ணிய தளங்கள்
Opening and closing times: 9.00 a.m. to 1.30 p.m. 4.00 p.m. to 7.00 p.m.
Address: Tirundhuthevankudi–612105,Vepathur Post,Tiruvidaimarudhur Taluk,Thanjavur district,
Phone: +91 435 – 2000 240, 99940 15871,
Car Rental In Prompt Travels-Your Travel Partner
சிம்ம ராசிபலன் 2019
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டில் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வருட ஆரம்ப மாதங்களில் சளி தொடர்பான தொந்தரவுகள் ஏற்படலாம். சோர்வும் களைப்பும் அடிக்கடி தோன்றலாம். எனினும் பிப்ரவரி மாத நடுவில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும். வேலையில் நற்பெயர் பெற கடினமாக உழைப்பீர்கள். வேலையில் சாதகமான சூழல் இருந்தாலும் உங்களுக்கு அதில் திருப்தி இருக்காது.உங்களது நேர்மையான குணம் பணியிடத்தில் உங்களது நிலையை உயர்த்தும். புதிய ஆபீசில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்க கூடும். 2019 ஆம் ஆண்டு ஆரம்பத்தில், வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவ்வருடம், நீங்கள் பொருளாதார ரீதியாக சில சவால்களை சந்திக்க கூடும். ஆனால் அதையும் மீறி நீங்கள் சாதகமான பலனை அடைவீர்கள். பண வரவு சீராக இருக்கும். ஜனவரி தவிர பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பண விரயங்கள் ஏற்படலாம்.2019 ஆம் ஆண்டு ராசிபலனின் படி, இந்த வருடம் காதல் வாழ்வில் சில சோதனைகள் ஏற்படலாம். துணையுடன் வாக்குவாதம் அல்லது கருத்து மோதல் ஏற்பட்டு அதனால் உங்கள் காதல் வாழ்வில் கசப்பு தோன்றக்கூடும்.
பரிகாரம் செய்யும் புண்ணிய தளங்கள்
Opening and closing times: 6.00 a.m. to 12.00 a.m-3.00 p.m. to 8.00 p.m.
Address: Sri Vanchiam-610 110, Tiruvarur district,
Phone: +91-4366 291 305, 94424 03926, 93606 02973.
Car Rental In Prompt Travels-Your Travel Partner
கன்னி ராசிபலன் 2019
கன்னி ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டில் உடல்நலனை பொருத்த வரையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். மேலும், உடல் ஆரோக்கியத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். உடல் நலனில் முன்னேற்றமும் சிக்கல்களும் மாறி மாறி ஏற்படக்கூடும். வேலையிலும் கலவையான பலங்களே கிட்டும். வாய்ப்புகள் பல இருந்தாலும் சிலவற்றில் தோல்வியும் சிலவற்றில் வெற்றியும் கிடைக்கும்.கன்னி ராசிக்காரர்கள் தங்களது பேச்சு திறனால் வெற்றியை ருசிப்பார்கள். உங்களது பொருளாதார நிலை எப்போதையும் விட சிறப்பாகவே இருக்கும். அதை நீங்கள் வருட ஆரம்பம் முதலே கவனிக்க தொடங்குவீர்கள். ஜனவரி, பிப்ரவரி, மற்றும் மார்ச் மாதங்களில் பல வழிகளிலும் பணவரவுகள் இருக்கும். அதே நேரத்தில் செலவுகளும் அதிகரிக்கும். எனினும் நிலைமை உங்களது கட்டுப்பாட்டுக்குள்ளே தான் இருக்கும். 2019 ஆம் ஆண்டில் உங்களது காதல் வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். 2019 ராசிபலனின் படி காதல் வாழ்வில் சில சவால்களை சந்திப்பீர்கள். பிசினஸ் அல்லது வேலை காரணமாக வீட்டை விட்டு தொலை தூர பயணம் செய்வீர்கள்.
பரிகாரம் செய்யும் புண்ணிய தளங்கள்
Opening and closing times: 6.00 a.m. to 11.00 p.m-4.00 p.m. to 8.30 p.m.
Address: Tirukazhukundram–603 109. Kancheepuram,
Phone: +91-44- 2744 7139, 94428 11149.
Car Rental In Prompt Travels-Your Travel Partner
துலாம் ராசிபலன் 2019
துலாம் ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டில் உடல் நிலை சீராக இருக்கும். இவ்வருடம், உங்களது ஆரோக்கியம் சிறப்பாக அமைவதுடன் நெடு நாளாக உங்களை வாட்டி வந்த வியாதிகளும் குணமடையும். வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மார்சுக்கு பிறகு, உங்களது புதிய முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். இந்த காலகட்டத்தில், பணியிடத்தில் நற்பெயர் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் ஆனால் அது உங்களது எதிர்பார்ப்புக்கு இணையாக இருக்காது. எனவே, அவர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். பொருளாதார நிலை நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.பொருளாதார ரீதியாக அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும் இதனால் உங்களது நிலை உயரும். 2019 ஆம் ஆண்டு ராசிபலனின் படி, புதிய நபருடன் உறவு முறை ஏற்படலாம். வாழ்க்கை துணையுடனான உறவு பலப்படும். அவருடன் சுற்றுலா செல்லும் வாய்ப்புகளும் அமையும். இனிமையாக பொழுதை கழிக்க நீங்கள் இருவரும் வெளியூர்களுக்கு சென்று வருவீர்கள்.எனினும், சில சூழ்நிலைகளில் ஏமாற்றம் ஏற்படலாம். ஆயினும் வீட்டில் நிலவும் அமைதியும் மகிழ்ச்சியும் உங்களுக்கு நிம்மதியை தரும், வருட நடுவில், ஒரு மகிழ்ச்சியான செய்தி உங்களை நாடி வரும். அந்த வேளையில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்
பரிகாரம் செய்யும் புண்ணிய தளங்கள்
Opening and closing times:6.00 a.m. to 9.00 p.m.
Address: Tiruthanigai, Tiruvallur district,
Phone: +91-44 2788 5303.
Car Rental In Prompt Travels-Your Travel Partner
விருச்சிக ராசிபலன் 2019
விருச்சிக ராசிக்காரர்கள் 2019 ஆம் ஆண்டில் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். உடலில் சில பாதிப்புகள் ஏற்படலாம். அதனை உதாசீனம் செய்ய வேண்டாம், கவனம் தேவை. உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் அவசியம். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் பாதிப்புகள் சற்று அதிகரிக்கும். வேலையில் நற்பலங்கள் கிடைக்கும்.2019 இல் உங்களது வேலையில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். தங்கமான வாய்ப்புகள் பல உங்களது வாசல் கதவை தட்டும். நல்ல கம்பெனியில் இருந்து வேலை வாய்ப்பு வரும். வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். உங்களது பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பணவரவு மற்றும் செலவுக்கு இடையே மாறுதல்களை காண்பீர்கள். எனவே அதனை சரியாக கையாள வேண்டும். காதல் வாழ்வில் சாதகமான சூழல் இருக்கும். மனதுக்கினிய நபருடன் ரொமான்ஸ் செய்து மகிழ்வீர்கள் இதனால் உங்களது உறவு பலப்படும்.
பரிகாரம் செய்யும் புண்ணிய தளங்கள்
Opening and closing times: 6.00 a.m. to 11.00 a.m-5.00 p.m. to 8.00 p.m.
Address: Chettikulam, Perambalur district,
Phone: +91 44 2742 0836 , 99441 17450,99768 42058.
Car Rental In Prompt Travels–Your Travel Partner
தனுசு ராசிபலன் 2019
தனுசு ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் சில உடல் நலக்குறைவுகள் ஏற்படலாம். பயணத்தில் களைப்பு தோன்றும். வேலையை பொருத்த வரை கலவையான பலன்களை இந்த வருடம் பெறுவீர்கள். ஏற்றமும் இறக்கமும் நிறைந்த வருடமாக இது இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறுவீர்கள். பொருளாதார நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். பல வழிகளில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களது கைக்கு வந்து சேரும்.2019 ஆம் ஆண்டு ராசிபலனின் படி, உங்களது குடும்பம் உங்களது பொருளாதார நிலை உயர காரணமாக இருக்கும். ஏதேனும் தொழில் தொடங்கினால், லாபகரமாக அமையும். காதல் வாழ்வில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கை துணையுடன் கருத்து வேற்பாடு தோன்றினால் அதனை பெரிதுபடுத்தாமல் சமாதானமாக சென்று விடவும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை சீராக இருந்து வரும். பெற்றோர்களுக்கு சிறு சிறு உடல் பாதிப்புகள் தோன்றி மறையலாம்.
பரிகாரம் செய்யும் புண்ணிய தளங்கள்
Opening and closing times: 5.30 a.m. to 12.00 a.m-4.00 p.m. to 8.30 p.m.
Address: Mayiladuthurai-609 001. Nagapattinam district,
Phone: +91- 4364 -222 345, 223 779, 93451 49412.
Car Rental In Prompt Travels-Your Travel Partner
மகர ராசிபலன் 2019
மகர ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பிரச்சினைகள் தோன்றக்கூடும். முதல் மூன்று மாதங்கள் அதாவது ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் உங்களது உடல் நலன் சீராக இருக்கும் ஆனால் அதன் பிறகு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சில உடல்நலக்கோளாறுகள் ஏற்படலாம். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். செலவுகள் இந்த வருடம் அதிகரிக்கக் கூடும். ஆனால் பண வரவுகள் அதிகரிக்காது. சர்வதேச தொடர்புகளால் லாபம் இருக்கும் ஆபீசில் பணிபுரிபவர் என்றால் பதவி உயர்வு மற்றும் நிர்வாகத்திடம் இருந்து பாரட்டுதல்கள் கிடைக்கும். அக்டோபர் மாதத்தில் சில நற்செய்திகள் கிடைக்கும். தொழிலை விருத்தி செய்வீர்கள். காதல் வாழ்வு அற்புதமாக இருக்கும். காதலித்தவரை வாழ்க்கை துணையாக அடைவீர்கள்.
பரிகாரம் செய்யும் புண்ணிய தளங்கள்
Opening and closing times: 6.00 a.m. to 12.30 p.m-4.30 p.m. to 10.00 p.m.
Address: Chidambaram-608 001, Cuddalore district,
Phone: +91 9349944261,+91 9443635280.
Car Rental In Prompt Travels-Your Travel Partner
கும்ப ராசிபலன் 2019
கும்ப ராசிக்காரர்களுக்கு 2019 ஆண்டு முழுவதும் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அதிக தெம்புடன் காட்சியளிப்பீர்கள். உங்களுக்குள் ஆர்வமும், உற்சாகமும் புதிய உத்வேகமும் பிறக்கும். இந்த வருடம் உங்களது வேலையில் சிறந்த நற்பலனை அடைவீர்கள். உங்கலது தொழிற்பிரிவில் வெற்றி காண்பீர்கள். நீங்கள் எடுக்கும் சரியான முடிவுகள் உங்களது தொழிலில் முன்னேற்றம் காணச் செய்யும். உங்களது சமயோசித முடிவுகளால் பெரும் வாய்ப்புகளை பெருவீர்கள். உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.இந்த வருடம் பல பொருள் வரவுகளை கொடுக்கும். உங்களது பொருளாதார நிலையை அது உறுதியாக்கும். வருடம் முழுவதும் சொத்துக்களை வாங்கி சேர்ப்பீர்கள். பணம் பல வழிகளிலும் வந்து குவியும், இதனால் உற்சாகமாக வளைய வருவீர்கள். இந்த வருடம் உங்கள் காதல் வாழ்வு எப்போதையும் விட அமோகமாக இருக்கும்.2019 ராசிபலனின் படி, வருட ஆரம்பம் அதாவது மார்ச் வரை சிறிது தொய்வாக இருக்கும். ஏற்றத்தாழ்வுகளை அந்த காலகட்டத்தில் சந்திப்பீர்கள். எனினும் இந்த காலகட்டத்தில் உங்களது மனதுக்கினிய நபரின் நம்பிக்கை உகந்தவாறு நடந்து கொள்ளுங்கள். அவர்களது நம்பிக்கையை உடைத்து அவர்களின் அன்பை இழக்காதீர்கள்.
பரிகாரம் செய்யும் புண்ணிய தளங்கள்
Address: Devipattinam,Rameswaram,Tamil Nadu-623514
Car Rental In Prompt Travels-Your Travel Partner
மீன ராசிபலன் 2019
மீன ராசிக்காரர்கள் 2019 ஆம் வருடத்தில் சீரான உடல் ஆரோக்கியம் பெறுவார்கள். எனினும் உடல்நிலையில் அலட்சியம் கூடாது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள யோகா, உடற்பயிற்சி, ஜிம், ஓட்டம் ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ளுதல் நலம் பயக்கும். உங்களது தினசரி பழக்க வழக்கங்களை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ளுங்கள்.காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ளுதல் மற்றும் இரவில் சரியான நேரத்துக்கு உறங்க செல்லுதல் ஆகியவற்றை கடைபிடித்தல் அவசியம். போதிய உறக்கம் உடலை ஆரோக்கியமாக வைக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும். மனதை நிலைப்படுத்த தியானம் செய்யலாம். மனதளவிலும் உடல் அளவிலும் ஃபிட்டாக இருந்தால் இந்த வருடம் உங்களது தொழிலில் பெரும் முன்னேற்ற காணலாம். பணியிடத்தில் உங்களுக்கென ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொள்வீர்கள்..கடின உழைப்பு, அர்பணிப்பு மற்றும் நேர்மையான பணியாளராக மற்றவரால் மதிக்கப்படுவீர்கள். 2019 ஆம் வருட ராசிபலனின் படி, உங்களது பொருளாதாரத்தில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள் எனவே சரியான திட்டமிடல் அவசியம். ஆபத்தான முடிவுகளை எடுக்கும் முன் நன்றாக சிந்திப்பது அவசியம். இல்லையென்றால், பொருள் இழப்புகள் நேரலாம். உங்களது காதல் வாழ்வில் சில குழப்பங்கள் தோன்றலாம். உங்களது ரொமான்டிக் வாழ்க்கையை பற்றிய சில சந்தேகங்கள் உங்கள் மனதில் ஏற்படக் கூடும். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையால் உங்கள் வாழ்க்கை துணையுடன் சூடான விவாதம் ஏற்படக் கூடும்.
பரிகாரம் செய்யும் புண்ணிய தளங்கள்
Opening and closing times: 6.00 a.m. to 11.00 a.m. and from 4.00 p.m. to 8.30 p.m.
Vaitheeswaran Koil– 609117, Nagapattinam district.
Phone: +91- 4364- 279 423.
Car Rental In Prompt Travels-Your Travel Partner